ரூ.47 ஆயிரத்தை கடந்த தங்கம்; சட்டென சரிந்த விலை - இப்போது வாங்கலாமா?

Tamil nadu Today Gold Price
By Sumathi Dec 29, 2023 06:29 AM GMT
Report

தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது.

தங்கம் விலை 

சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

gold price today

தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (டிச.29) குறைந்துள்ளது.

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

போர் எதிரொலி; இல்லத்தரசிகளுக்கு பேரிடி - எகிறிய தங்கம் விலை, ஆனால் வைரத்தை கொஞ்சம் பாருங்க!

இன்றைய நிலவரம்

அதன்படி, ஆபரண தங்கமான 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,910 ஆகவும், சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ. 47,280 ரூபாயாகவும் உள்ளது.

24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,447-க்கும், ஒரு சவரன் ரூ. 51,576-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.30 காசுகள் குறைந்து ரூ.79.70 ஆகவும், கிலோ ரூ.79,700 ஆகவும் விற்பனையாகிறது.