அடி வயிற்றில் மறைத்து 7.3 கிலோ தங்கம் கடத்திய 4 வெளிநாட்டினர் கைது
hyderabad
goldseized
By Petchi Avudaiappan
தெலங்கானாவில் அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தெலங்கானாவில் உள்ள ஹைதராபாத் விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்குரிய வகையிலான 4 பயணிகளிடம் சோதனையிட்டதில் தங்க கடத்தலில் அவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.
அவர்கள் 4 பேரும் சூடான் நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அடி வயிற்றில் மறைத்து கடத்தி வந்த 7.3 கிலோ தங்கம் அவர்களிடம் இருந்து சுங்க சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.3.6 கோடி என கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.