அட்சய திருதியைக்கு தங்கம் வாங்கணுமா? இன்றைய தங்கம் விலை நிலவரம் இதுதான்
Today Gold Price
Gold
By Pavi
கடந்த 9ம் தேதியிலிருந்து சரசரவென உயர்ந்து கொண்டிருந்த தங்கத்தின் விலை 15ம் தேதி குறைந்த நிலையில் தற்போது 70 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 8940ரூ-க்கும்,சவரன் ரூ.71,560க்கும் விற்பனையாகிறது.
இதுவரை இல்லாத அளவு தமிழ் புத்தாண்டில் சவரனுக்கு ரூ.1520 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையில் மாற்றம் ஏதும் இல்லாமல் ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.