அதிரடியாக சரிந்த தங்கம் விலை - இல்லத்தரசிகளே மிஸ் பண்ணிடாதீங்க!

Tamil nadu Today Gold Price
By Vinothini Jul 22, 2023 07:32 AM GMT
Report

இன்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு, இந்தியாவின் தங்கம் மீதான வரி போன்ற காரணங்களால் நாட்டில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருகிறது. சில நாட்களாக தங்கம் விலை குறைவதும் ஏறுவதுமாக மாறிக்கொண்டே வருகிறது.

gold-rate-today

கடந்த திங்கள்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடியாக குறைந்தது. ஆனால், செவ்வாய் கிழமை அப்படியே மீண்டும் சவரனுக்கு ரூ.112 உயர்ந்தது. இதேபோல் புதன்கிழமை சவரனுக்கு 320 ரூபாயும், வியாழக்கிழமை 160 ரூபாயும் என அதிரடியாக உயர்ந்தது.

இன்றைய நிலவரம்

இந்நிலையில், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ. 44,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று மீண்டும் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.44,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,555-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold-rate-today

24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 6,060 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 48,480 ரூபாய் ஆகவும் விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.50 குறைந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500 விற்பனை செய்யப்படுகிறது.