மிஸ் பண்ணாதீங்க; தடாலடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
கடந்த சில நாட்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலை நேற்று முதல் சரிவை நோக்கி நகரத்தொடங்கியுள்ளது.
தங்கம் விலை
அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை சற்றே குறைந்துள்ளது அதன் படி, தங்கம் விலை சற்று குறைந்து சவரனுக்கு 41,840 ரூபாயாக உள்ளது. சென்னையில் இன்று காலை ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, ரூ.5,230 ஆக உள்ளது.
சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, ரூ.41,840 ஆக குறைந்துள்ளது. வெள்ளியின் விலை இன்று சற்றே அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை
ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் அதிகரித்து 74 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை 300 ரூபாய் அதிகரித்து 74 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் புத்தாண்டையொட்டி ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு 552 ரூபாய் அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.