16 நாட்கள் தொடர் சரிவு... இன்று ஒரே நாளில் எகிறிய தங்கம் விலை!
நவம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவைக் கண்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (நவம்பர் 23) திடீரென உயர்ந்துள்ளமை நகை பிரியர்கள் மத்தியில் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை குறைந்திருந்த நிலையில், இன்று மீண்டும் விலை அதிகரித்துள்ளது.

கடந்த நவம்பர் 21ஆம் தேதி, 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.11,465க்கும், ஒரு சவரன் ரூ.91,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
ஆனால், இன்று 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600 ஆகவும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது.ஒரு கிராமுக்கு ரூ.165 உயர்ந்து ரூ.9,495 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,320 உயர்ந்து ரூ.75,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை இன்று திடீரென உயர்ந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களிடையே கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை

வெள்ளி விலையில் எந்த மாற்றமுமின்றி கிராம் ரூ.175க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
December 2026 Horoscope: தொட்டதெல்லாம் வெற்றியாகும் டாப் 4 ராசிக்காரர்கள்! உங்க ராசியும் இருக்கா? Manithan