ஒரு வாரம் தான்.. உச்சம் தொட்ட தங்கம் விலை - நிலவரம் என்ன?

Tamil nadu Today Gold Price
By Sumathi Mar 15, 2023 05:53 AM GMT
Report

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து காணப்படுகிறது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

ஒரு வாரம் தான்.. உச்சம் தொட்ட தங்கம் விலை - நிலவரம் என்ன? | Gold Rate Increase In Tamilnadu 15 03 2023

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது.

சற்று குறைவு

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.10 குறைந்து, ரூ.5,380க்கு விற்பனையாகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசு உயர்ந்து, ரூ.72.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.