தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்தது - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததன் எதிரொலியாக கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.
இதனால் பங்குச்சந்தைகள் சரிந்து வருவதால் பெரும்பாளான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் இருந்து வெளியேறி தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதன் எதிரொலியாக இந்தியாவில் தங்கத்தின் விலை உயர்வதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
இதனை தொடர்ந்து, இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. அதன்படி, இன்று ஒரு சவரன் தங்கம் ரூ.280 குறைந்து, ரூ.37,920-க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் தங்கம் நேற்று ரூ.4,775-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.35 குறைந்து ரூ.4,740-க்கு விற்கப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலை நேற்று ஒரு கிராம் ரூ.67.50-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.67-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.67,000-க்கு விற்கப்படுகிறது.