தங்கம் விலை மீண்டும் உயர்வு - சவரனுக்கு ரூ.272 அதிகரிப்பு

goldrate chennaigold goldpricehike
By Swetha Subash Apr 01, 2022 09:26 AM GMT
Swetha Subash

Swetha Subash

in சமூகம்
Report

சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

அந்த வகையில், நேற்று மீண்டும் தங்கம் விலை உயரத்தொடங்கியது. நேற்று பவுனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.38,400-க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

இன்று பவுனுக்கு ரூ.272 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,672 ஆக விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.34 அதிகரித்து ரூ.4,834-க்கு விற்பனையாகிறது.

நேற்று ஒரு கிராம் ரூ.71.50-க்கு விற்கப்பட்ட வெள்ளி இன்று 20 காசுகள் அதிகரித்து ரூ.71.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.200 உயர்ந்து ரூ.71,700 ஆக விற்பனையாகிறது.