அலர்ட் மக்களே!! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39000-க்கும் கீழ் குறைந்தது

goldrate chennaigoldrate goldpricebelow39k
By Swetha Subash Mar 15, 2022 07:09 AM GMT
Swetha Subash

Swetha Subash

in வணிகம்
Report

சென்னையில் தங்கம் விலை கடந்த 2 நாட்களாக குறைந்து வருகிறது.

ரஷ்யா, உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் அதன் தாக்கம் உலகச்சந்தையில் எதிரொலித்து வருகிறது.

அந்த வகையில் தங்கம் விலை கடந்த மாதம் 24-ம் தேதி முதல் ஏறுவதும், குறைவதுமாக இருந்து வருகிறது.

அலர்ட் மக்களே!! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39000-க்கும் கீழ் குறைந்தது | Gold Rate In Chennai Falls Below 39000

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4,894-க்கும், சவரன் ரூ.39,152-க்கும் விற்க்கப்பட்ட நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.

ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு நேற்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.25 குறைந்து ஒரு கிராம் ரூ.4,869-க்கும், சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.38,952-க்கும் விற்கப்பட்டது.

அதேபோல் இன்று கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.4,819-க்கும் ஒரு சவரன் ரூ.38,952-ல் இருந்து ரூ.38,552 ஆக குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

அலர்ட் மக்களே!! சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.39000-க்கும் கீழ் குறைந்தது | Gold Rate In Chennai Falls Below 39000

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 சரிந்து இப்போது தங்கம் விலை ரூ.39,000-க்கும் கீழ் வந்துள்ளது.

அதேபோல் வெள்ளி விலையும் கிராம் ரூ.74.20-ல் இருந்து ரூ.72.80 ஆகவும், கிலோ ரூ.74,200-ல் இருந்து ரூ.72,800-ஆகவும் குறைந்துள்ளது.