சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது - ஒரு சவரன் ரூ.38,368-க்கு விற்பனை

goldrate chennaigoldrate goldratetoday
By Swetha Subash Mar 29, 2022 07:04 AM GMT
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தாக்குதலால் உலகம் முழுவதும் பொருளாதார நெறுக்கடி கடுமையாக ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது, பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது - ஒரு சவரன் ரூ.38,368-க்கு விற்பனை | Gold Rate Details For Today

அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து,  ரூ.38,368-க்கு விற்பனை ஆகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து, ரூ.4,796-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.41560-க்கு விற்பனையாகிறது.

வெள்ளி கிராமுக்கு 30 பைசா குறைந்து, ரூ.72.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.72,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.