ட்ரம்ப் அறிவிப்பால் தங்கம் விலை மீண்டும் உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரான் போர் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவில் தங்கம் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது.
நேற்று வரை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் சரிவில் இருந்த நிலையில், இன்று திடீரென ராக்கெட் வேகத்தில் உயர்ந்தன.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX), தங்கம் 10 கிராமிற்கு ரூ.1,492 அதிகரித்து ரூ.161,791 ஆகவும், வெள்ளி 4 சதவீதம் உயர்ந்து கிலோவிற்கு ரூ. 278,339 ஆகவும் சென்றது.
ட்ரம்ப், “ஈரானுக்கு எதிரான போர் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது” எனக் கூறியதோடு, ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் விநியோகத்தை ஈரான் தடுத்தால், அது 20 மடங்கு தாக்குதலை சந்திக்கும் என எச்சரித்தார். இதனால் பங்குச் சந்தை 600 புள்ளிகள் உயர்வுடன் தொடங்கியது.

மறுபுறம், கச்சா எண்ணெய் விலை 9.75 சதவீதம் சரிந்து பீப்பாய்க்கு 89.31 டாலராக குறைந்தது. எண்ணெய் விலை சரிவால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும் வாய்ப்பு குறைந்தது. இதுவே தங்கம் விலையை மேலும் உயர்த்தியது.
போர் முடிவடையும் அறிகுறிகள் முதலீட்டாளர்களை மீண்டும் தங்கத்தின் பக்கம் ஈர்த்துள்ளன. அடுத்த சில நாட்களில் தங்கம் விலை மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது எனக் நிபுணர்கள் கூறுகின்றனர்.