வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை குறைந்தது
Tamil nadu
Chennai
Today Gold Price
Daily Gold Rates
By Thahir
2 years ago
தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கத்தின் விலை இன்று ஒரு சவரன் ரூ.320 குறைந்துள்ளது.
தங்கம் விலை சற்று குறைந்தது
தங்கம் விலை நேற்று வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. நேற்று ஒரு சவரன் ரூ.720 உயர்ந்து ரு.45,520க்கு விற்பனை செய்யபட்டது. கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,690க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து 45,200-க்கு விற்பனை ஆகிறது. கிராமிற்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70காசுகள் குறைந்து ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.