ஒருவழியாக 3 நாட்களுக்கு பின் சரிந்த தங்கம் விலை - இப்போ எவ்வளவு தெரியுமா?
தங்கம் விலை சவரனுக்கு ரூ.440 சரிந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம் இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 04) விலை குறைந்துள்ளது.
குறைவு
அதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து ரூ.9,050க்கும், சவரனுக்கு ரூ.440 குறைந்து ரூ.72,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் வெள்ளி விலை ரூ.1 குறைந்து கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.