தங்கம் விலையில் அதிரடி வீழ்ச்சி - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைவு
Gold Prices Continue to Fall : இன்றைய (நவம்பர் 17) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரத்தைப் பார்ப்போம். நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது.
கடந்த ஒரு வாரமாக இந்த விலை வீழ்ச்சி நீடித்து வரும் நிலையில், இன்றும் தங்கத்தின் விலை அதிரடியாகக் குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கக் காத்திருப்பவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.12,470-க்கும், ஒரு சவரன் ரூ.99,760-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில், இன்று ஒரு கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.2,040 குறைந்து ரூ.97,720 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.205 குறைந்து ரூ.10,000 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை

தங்கத்தின் விலையைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.185 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,85,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒரே நாளில் கணிசமாகக் குறைந்துள்ளதால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் இல்லக் காணி மதிலில் காட்சிபடுத்தப்பட்ட பதாகை கிழித்தெறிப்பு IBC Tamil
உக்ரைன் நடத்திய வரலாறு காணாத தாக்குதல் - கடலுக்குள் சரிந்த கிரிமியா பாலம்: பதிலடி கொடுத்த ரஷ்யா IBC Tamil