தொடர்ந்து அதிரடி சரிவில் தங்க விலை - நல்ல சான்ஸ் யூஸ் பண்ணிக்கோங்க மக்களே!
தங்கத்தின் விலை அதிரடியாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
தங்கம் விலை
இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து வந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலையில் சற்று குறைவு ஏற்பட்டுள்ளது. கிராமுக்கு ரூ.15 குறைந்து ரூ.5,235-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.41,880-க்கு விற்பனையாகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.44,776 க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிராம் வெள்ளி ரூ.70.00-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.70,000-ஆக இருக்கிறது.