தொடர்ந்து உயரும் தங்கம் விலை - சவரன் 62 ஆயிரத்தை தொடும் என்பதால் அதிர்ச்சி
சேமிப்பிற்கு பலவழிகள் இருந்தாலும் கூட தங்கத்தில் முதலீடு என்பது பலராலும் விரும்பக்கூடிய ஒன்றாக இருந்து வருகிறது.
தொடர்ந்து உயரும் தங்கம் விலை
நடுத்தர மக்கள் முதல் பெரும் முதலாளிகள் வரை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இந்தியாவில் தங்கத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே உள்ளது.
உலகநாடுகளுடன் ஓப்பிடும் பொழுது தங்கத்தை அதிகம் பயன் படுத்துபவர்கள் இந்தியர்கள்தான் முதலிடம். தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ. 41,528ஆக இருந்த தங்கத்தின் விலை, இன்று ரூ.136 உயர்ந்து ரூ.41,664க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் 62 ஆயிரத்தை நெருங்கும்
மேலும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.17 அதிகரித்து ரூ.5,208க்கு விற்பனை செய்யப்படுகிறது வெள்ளியின் விலை, கிராமுக்கு ரூ.50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.75.00 க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.500 குறைந்து ரூ.75,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால் தங்கத்தின் விலை இந்த ஆண்டு இறுதிக்குள்1 சவரன் 62000 ரூபாய் தாண்டக்கூடும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.