கண்ணீர் வடிக்கும் இல்லத்தரசிகள் - வரலாறு காணாத வகையில் உயர்ந்த தங்கம் விலை..!
தங்கம் விலை இன்றைய நிலவரப்படி சவரனுக்கு ரூ.80 உயர்ந்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதற்கு காரணம் அமெரிக்கா டாலர்களின் மதிப்பு தான் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது தங்கம் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் அதனை வாங்குவதற்கு தொடர்ந்து ஆர்வம் காட்டி தான் வருகிறார்கள்.
கிடு கிடுவென உயர்வு
இந்நிலையில், தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு எறியுள்ளது, தற்போது தங்கம் சவரனுக்கு 45 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு 20 குறைந்து 5,620க்கும் , சவரனுக்கு ரூபாய் 160 குறைந்து 44,960க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்றைய நிலவரப்படி, தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,630க்கும், சவரனுக்கு 80 உயர்ந்து ரூ.45,040க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது, கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து ரூ.80.40க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 80,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.