வரலாறு காணாத வகையில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை - சவரனுக்கு ரூ.720 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இறக்குமதி வரி அதிகரிப்பு
அனைவராலும் பெருமளவில் மதிக்கப்படும் தங்கம், மக்களின் மிகப்பெரிய சொத்தாகவும் அவர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெருமளவில் உதவுகிறது.
இத்தகைய குணமுள்ள தங்கத்தின் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கம் காணப்படுவதுண்டு. இந்த நிலையில் நேற்றைய பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை அதிகரிப்பதாக நிதியமைச்சர் அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வரலாறு காணாத வகையில் விலையேற்றம்
அந்த வகையில் சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.5505க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையடுத்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ரூ.44,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் விலையேற்றம் என்பது 44 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.