கிடுகிடுவென உயரும் தங்கம் - மக்கள் அதிர்ச்சி
today
shocked
gold-price
chennai-people
By Nandhini
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் போர் தொடர்ந்து நடத்தி வருகிறது. இதனால் உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதன் எதிரொலியாக இந்தியாவில் கச்சா எண்ணெய், தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. பங்குச்சந்தைகளும் சரிந்து வருகின்றன.
இந்நிலையில், இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.776 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,760க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.4970க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதால், தங்கத்தின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.