அடேங்கப்பா.. இன்று ஒரே நாளில் உச்சத்தை தொட்ட தங்கம் விலை - ஷாக்கான மக்கள்
தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு பவுன் ரூ.42 ஆயிரத்தை தாண்டி சென்றுக்கொண்டிருப்பதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.368 அதிகரித்துள்ளது.
இன்றைய தங்கத்தின் விலை -
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,250க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.46 உயர்ந்து ரூ.5,296க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.42,000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.368 அதிகரித்து ரூ.42,368க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய 22 கேரட் தங்கம் விலை நிலவரம் -
1 கிராம் - ரூ. 5,296
8 கிராம் - ரூ. 42,368
10 கிராம் - ரூ. 52,960
100 கிராம் - ரூ.5,29,600
இன்றைய வெள்ளியின் விலை -
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.74க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து ரூ.75 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 75,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் - ரூ.75
8 கிராம் - ரூ.600
10 கிராம் - ரூ.750
100 கிராம் - ரூ.7,500
1 கிலோ - ரூ.75,000