இன்றைய தங்கம் விலை எவ்வளவுன்னு தெரியுமா? இதோ...

Today Gold Price Daily Gold Rates Gold
By Nandhini Jan 05, 2023 12:24 PM GMT
Report

தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 31-ந் தேதி தங்கம் விலை பவுன் ரூ.41 ஆயிரத்தை தாண்டி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 80 குறைந்துள்ளது. 

இன்றைய தங்கத்தின் விலை -

நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.5,238க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.10 குறைந்து ரூ.5,228க்கு விற்பனை ஆகிறது. அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.41,904க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.80 குறைந்து ரூ.41,824க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

gold-price-today-chennai

22 கேரட் தங்கம் விலை நிலவரம் -

1 கிராம் - ரூ. 5,228

8 கிராம் - ரூ. 41,824

10 கிராம் - ரூ. 52,280

100 கிராம் - ரூ.5,22,800

இன்றைய வெள்ளியின் விலை -

நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.75.50க்கு விற்பனையானது. இன்று அதே விலையில் ரூ.74 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 74,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

1 கிராம் - ரூ.74

8 கிராம் - ரூ.592

10 கிராம் - ரூ.740

100 கிராம் - ரூ.7,400

1 கிலோ - ரூ.74,000