அடேங்கப்பா.... கிடுகிடுவென உயர்ந்த தங்கம் விலை... - 1 சவரன் எவ்வளவுன்னு தெரியுமா? - மக்கள் ஷாக்
சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் மக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இன்றைய தங்கத்தின் விலை
நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.4,893க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலை ரூ.8 உயர்ந்து ரூ.4,901க்கு விற்பனை ஆகிறது.
அதேபோல், நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.39,144க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று தங்கம் விலையில் ரூ.64 உயர்ந்து ரூ.39,208க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய வெள்ளியின் விலை
வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
நேற்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.67.50க்கு விற்பனையானது. இன்று வெள்ளி விலை ரூ.20 பைசா உயர்ந்து ரூ.67.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ரூ. 67,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.