தாறுமாறாக ஏறிய தங்கம் விலை - கதிகலங்கும் மக்கள்!

Tamil nadu Chennai Today Gold Price
By Sumathi Mar 31, 2023 05:33 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

தாறுமாறாக ஏறிய தங்கம் விலை - கதிகலங்கும் மக்கள்! | Gold Price Today 31 03 23

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன்படி, இன்று விலை உயர்வில் உச்சம் கண்டுள்ளது.

அதிரடி உயர்வு

அதன் அடிப்படையில், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,590-க்கும், ஒரு சவரன் ரூ.44,720-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.77.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.