சற்று குறைந்த தங்கம் விலை; தொடர்ந்து சரியுமா - குழப்பத்தில் மக்கள்!
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 520ரூபாய் குறைந்துள்ளது.
தங்கம் விலை
தென்இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இந்நிலையில், பட்ஜெட்டில் தங்கத்திற்கான இறக்குமதி வரியினை அதிகரிப்பதாக நிதியமைச்சர் அறிவித்த நிலையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்தது.

அதன்படி, நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய் உயர்ந்து ரூ.44,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று, 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.5,440க்கு விற்பனையாகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ரூ.43,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1.40 காசுகள் குறைந்து ரூ.76.40க்கு விற்பனையாகிறது. மேலும், சவரனுக்கு 11 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.611.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.