அதிரடியாக விலை குறைந்த தங்கம் விலை - மக்கள் ஹேப்பி!
தங்கம் பவுனுக்கு அதிரடியாக ரூ.200 விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
உலகத்தில் கரன்சிக்கு அடுத்தபடியாக தங்கம் தான் சொத்து மதிப்பாக கணக்கிடப்படுகிறது. பணக்காரர்கள் முதல் பாமரர் வரை தங்கத்தில் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணம் அதனை உடனடியாக பணமாக மாற்ற முடியும் என்பது தான்.
இதுதவிர சர்வதேச பொருளாதார சூழலில் பதற்ற நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக கருதும் தங்கத்தில் தான் முதலீடு செய்கின்றனர்.
குறைவு
இந்நிலையில், இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.41,680க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.5,210க்கு விற்கப்படுகிறது.
சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 90 காசுகள் குறைந்து ரூ.70க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.