ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு

gold-price-today
By Nandhini Nov 05, 2021 06:21 AM GMT
Report

சென்னையில் ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரித்துள்ளது. சென்னையில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் நிலவி வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து ஒரு கிராம் ரூ.4,469க்கும், ஒரு சவரன் ரூ.35,752க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று சவரனுக்கு ரூ.176 குறைந்து ஒரு கிராம் ரூ.4,447க்கும், ஒரு சவரன் ரூ.35,576க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.424 அதிகரித்திருக்கிறது.

இதனையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.53 அதிகரித்து ரூ.4,500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.424 அதிகரித்து ரூ.36,000க்கு விற்பனையாகிறது.

மேலும் வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 90 காசுகள் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.68.60க்கும், ஒரு கிலோ ரூ.68,600க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.424 உயர்வு | Gold Price Today