2-வது நாளாக தங்கம் விலை சரிந்தது - இன்றைய நிலவரம்
சென்னையில் தங்கம் விலை கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் அதிரடி வீழ்ச்சியை அடைந்தது. இதன் தொடர்ச்சியாக 4 நாட்களாக தொடர்ந்து சரிந்து தங்கம் விலை ரூ.35 ஆயிரத்துக்கு கீழ் சென்றுள்ளது சாமானிய மக்களை மகிழ்ச்சி அடையச் செய்திருக்கிறது. பிறகு தங்கம் விலை மீண்டும் உயர்ந்து ரூ.35 ஆயிரத்தை எட்டியது.
அதைத் தொடர்ந்து தற்போது ரூ.34 ஆயிரத்தில் நீட்டித்து வருகிறது. பெரிதளவில் மாற்றங்கள் ஏதுவும் இல்லாமல், ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.72 குறைந்திருக்கிறது.
இதனையடுத்து, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ரூ.4,340க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.34,720க்கு விற்பனையாகி வருகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபய் 20 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.63.00க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.63,000க்கும் விற்பனையாகி வருகிறது.