தொடர்ந்து சரிவு; அதிரடியாக குறைந்த தங்கம் விலை - இப்போது வாங்கலாம்
தொடர்ந்து 5வது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.
தங்கம் விலை
இந்தியாவிலும் குறிப்பாக தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
பட்ஜெட்டுக்கு பிறகு தங்கத்தின் விலை அதிரடியாக ரூ. 45 ஆயிரத்தை தாண்டியதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனால் கடந்த 5 நாட்களாக அதிரடியாக விலை குறைந்து வருகிறது.
சரிவு
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து 5,315 ரூபாய்க்கும், சவரன் ஒன்றுக்கு 120 ரூபாய் வரை குறைந்து 42,520 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து 72 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 72,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.