மாறாத தங்கம் விலை: வாங்கலாமா - விலை நிலவரம் எவ்வளவு.?
தங்கத்தின் விலை வார இறுதியில் சற்று உயர்ந்துள்ளது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை இன்று (12/03/2023) 1 ரூபாய் உயர்ந்து கிராம் 5,271 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரன் 8 ரூபாய் உயர்ந்து 42,168 ரூபாயாக உள்ளது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் கிராம் ரூ.5,750க்கு விற்பனையாகிறது. சவரன் 46,000 ரூபாயாக உள்ளது.
வெள்ளி விலை நேற்றைய விலையுடன் ஒப்பிடும் போது கிராம் 68.70 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 68,700 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.