மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன?

Silver Gold
By Vinoja Nov 26, 2026 05:48 AM GMT
Report

நவம்பர் 26ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ள நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். 

கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 அதிகரித்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? | Gold Price Surges Again Sovereign Rises By Rs 960

நவம்பர் மாதத் தொடக்கம் முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்தது. குறிப்பாக, கடந்த 16 நாட்களில் மட்டும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.15,360 வரை குறைந்தது. இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென தங்கத்தின் விலை உயர்ந்தது.

பின்னர் நேற்று (நவம்பர் 25) மீண்டும் விலை குறைந்தது. நேற்று 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420க்கும், ஒரு சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360க்கும் விற்பனை செய்யப்பட்டது.

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? | Gold Price Surges Again Sovereign Rises By Rs 960

இன்றைய விலை நிலவரம் 

இந்த நிலையில், இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.11,540க்கும், ஒரு சவரனுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.92,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.95 அதிகரித்து ரூ.9,440க்கும், ஒரு சவரனுக்கு ரூ.760 அதிகரித்து ரூ.75,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை 

மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் என்ன? | Gold Price Surges Again Sovereign Rises By Rs 960

தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.