ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்தது..!
Tamil nadu
Chennai
By Thahir
3 years ago
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சரவனுக்கு ரூ.200 குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின் தங்கம் விலை நிலையின்றி காணப்படுகிறது.
இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்று தங்கம் விலை கடுமையாக சரிந்துள்ளது. சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 கேரட்) 4,837 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,696 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 68.80 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிலோ வெள்ளி 68,800ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.