இனி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 10,000 தொடும்... வெளியான அதிர்ச்சி தகவல்!
இனி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 10,000 தொடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தங்கம்
2024 ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அதாவது ரூ 40 ஆயிரம் வரை விற்க்கபட்ட தங்கம் விலை அடுத்த 6 மாதங்களில் 50 ஆயிரத்தை கடந்து சமானிய மக்களை அதிர்ச்சி அடைய வைத்தது.
தற்பொழுது தங்கம் ஒரு சவரன் ரூ.66,000 கடந்து அதிர்ச்சி அளித்து வரும் நிலையில், இனி தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 10,000 தொடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1440 உயர்ந்து நடுத்தர மக்கள் தங்க நகைகளை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் பங்குச்சந்தைகளில் ஏற்படும் சரிவுகளும், உலகளவில் ஏற்படும் அரசியல் சமநிலையற்ற சூழல் தான்.
அதிர்ச்சி தகவல்
குறிப்பாக உக்ரைன் - ரஷ்யா போர், இஸ்ரேல் - ஹமாஸ் போர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரிக்க வைத்தன. மேலும் அதிபரான டிரம்ப் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருவதால் உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டு வருகிறது.
இந்த சூழலில் வரும் நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10,000 ரூபாய் வரை கூட விற்பனை செய்யப்படும் என்று தங்க நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க பங்குச்சந்தைகளான S&P 500, நாஸ்டாக், டோ ஜோன்ஸ் ஆகியவற்றில் வியாழக்கிழமை ஏற்பட்ட சரிவே இந்தியாவிலும் தங்கம் விலை அதீத அளவில் உயர முக்கிய காரணியாக கூறப்படுகிறது.