ஒரே நாளில் இரண்டு முறை அதிகரிப்பு - அட்சய திருதியை நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்கினால் வாழக்கை செழிப்பாகவும் செல்வமும் பெருகும் என்ற ஐதீகம் நிலவுகிறது. அட்சய திருதியை என்ற பெயருக்கு வளர்க என பொருள் படும்.
இந்த நாளில் நாம் செய்யும் செயல் தொடர்ந்து மேன்மேலும் வளரும் என்பதே நம்பிக்கை. அதன் காரணமாகவே தங்கம் வாங்கும் வழக்கம் இந்த நாளில் அதிகளவில் நீடிக்கிறது. அட்சய திருதியை நாளில் கல் உப்பு அல்லது மஞ்சள் போன்ற பொருட்களை வாங்குவதும் தங்கம் வாங்குவதற்கான பலனை அளிக்கும் என கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை
சித்திரை மாதத்தின் 14-ஆம் தேதியில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடம் அட்சய திருதியை மே 10 ஆம் தேதி காலை 4.17 மணிக்கு திரிதியை திதி துவங்கி மே 11ஆம் தேதி மதியம் 2:50 மணிக்கு முடிவடைகிறது.
மக்கள் இன்று தங்கம் வாங்க ஆர்வத்துடன் காத்திருந்தனர். கடந்த சில காலமாக, தங்கத்தின் விலை பெரிய ஏற்றங்களை காண்டவ வரும் நிலையில், சிறிய சிறிய இறக்கங்களை மட்டுமே காணுகிறது.
இன்று அட்சய திருதியை தினத்தை முன்னிட்டு 2 காரட் மதிப்பு கொண்ட தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் இரண்டு முறை 360 ரூபாய் அதிகரித்து ரூ.53,640 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஒரு கிராம் விலை ரூ.45 உயர்ந்து 6,660 ரூபாய்க்கும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.30 உயர்ந்து 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.