வரலாறு காணாத உயர்வு; 2 நாளில் இவ்வளவா - நகைப்பிரியர்கள் ஷாக்!
தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கம் விலை
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார காரணிகளின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை தீர்மானிக்கப்படுகிறது. தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக இருக்கிறது. தொடர்ந்து, கடந்த சில தினங்களாக ஏற்றம், இறக்கம் என காணப்பட்டு வந்த நிலையில், அதிகரித்துள்ளது.
உயர்வு
இந்நிலையில், நேற்று முன்தினம் தங்கம் விலை கிராம் ரூ.100 அதிகரித்து ரூ.5,510-க்கும்,பவுனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.44,080-க்கும் விற்பனையானது. தொடர்ந்து,
நேற்று கிராம் ஒன்றுக்கு ரூ.45 அதிகரித்து ரூ.5,555-க்கும், பவுனுக்கு ரூ.360 அதிகரித்து ரூ.44,440-க்கும் விற்பனையானது. கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.1,160 அதிகரித்துள்ளது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.77-க்கும், கிலோ பார் வெள்ளியின் விலை நேற்று ரூ.77,000-ஆக இருந்தது.