தங்கம் விலை சவரனுக்கு இவ்வளவு உயர்வா? மக்கள் கலக்கம்
தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் விளைவாக கடந்த சில தினங்களாக விலை உச்சம் கண்டு வருகிறது.
அதிர்ச்சி
அதன்படி, தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,450க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.43,600க்கும் விற்கப்படுகிறது.
இதே போன்று வெள்ளி விலையும் கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ. 73.10 எனவும், ஒரு கிலோ வெள்ளி 73,100 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.