தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

Tamil nadu Chennai
By Thahir Aug 09, 2022 06:24 AM GMT
Report

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அதிகரிப்பு 

கொரோனா ஊரடங்கு மற்றும் உக்ரைன் - ரஷ்யா போர் ஆகிய காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்தது அதனால் தங்கத்தின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு | Gold Price Hiked Chennai

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ஒரு சவரன் ரூ.39,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கம் கிராமிற்கு 30 ரூபாய் உயர்ந்து ரூ.4,880-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.1.50 ஆக உயர்ந்து ரூ.64.50-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ.64,500 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.