தங்கம் விலை கிடு கிடுவென உயர்வு - சவரன் ரூ.40 ஆயிரத்தை தாண்டியது..!

Price Chennai Gold Hike சென்னை தங்கம் விலை
By Thahir Apr 14, 2022 08:06 AM GMT
Report

இன்றைய விலை நிலவரப்படி தங்கத்தின் விலை கிராமுக்கு 9 ரூபாய் அதிகரித்து ரூ.5,005-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.72 உயர்ந்து 40,040 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 74 ரூ 40 காசுகளாக உள்ளது. தங்கம் விலை உக்ரைன் போர் எதிரொலியால் கடந்த மாதம் கடுமையாக அதிகரித்து இருந்தது.

கடந்த மாதம் மார்ச் 8-ம் தேதி 40 ஆயிரத்து 840 ரூபாயாக அதிகரித்து இருந்தது. பின்னர் விலை படிப்படியாக குறைந்து 39 ஆயிரம் ரூபாய்க்கு கீழாக குறைந்துள்ளது.

தற்போது மீண்டும் தங்கம் விலை அதிகரித்து சவரன் 40 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது.