தங்கம் விலையில் அதிரடி சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு!

Silver Gold
By Vinoja Nov 25, 2026 05:38 AM GMT
Report

Gold Prices Fall by Rs. 2,360 Per Sovereign: நவம்பர் 25ஆம் தேதியான இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம் நகை வாங்குவோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த தங்கத்தின் விலை, இடையில் திடீரென உயர்வைக் கண்ட நிலையில், இன்று மீண்டும் அதிரடியாகக் குறைந்துள்ளது.கடந்த 16 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.15,360 வரை சரிந்துள்ளது.

தங்கம் விலையில் அதிரடி சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு! | Gold Price Falls Sharply 2360 Drop Per Sovereign

இதற்கிடையில், கடந்த இரண்டு நாட்களாகத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்ததால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்கள் குழப்பத்தில் இருந்தனர்.

நேற்று (நவம்பர் 24) 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.115 உயர்ந்து ரூ.11,715க்கும், சவரனுக்கு ரூ.920 அதிகரித்து ரூ.93,720க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலையில் அதிரடி சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு! | Gold Price Falls Sharply 2360 Drop Per Sovereign

இன்றைய தங்க விலை நிலவரம் 

ஆனால், இன்று தங்கம் விலையில் அதிரடியான சரிவு ஏற்பட்டுள்ளது.அதன்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.295 குறைந்து ரூ.11,420 ஆகவும், சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ரூ.91,360 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை சுமார் ரூ.2,000 உயர்ந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், 18 காரட் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.240 சரிந்து ரூ.9,345 ஆகவும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.74,760 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலையில் அதிரடி சரிவு - ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைவு! | Gold Price Falls Sharply 2360 Drop Per Sovereign

வெள்ளி விலை

வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக மாற்றம் இல்லாமல் இருந்த வெள்ளி விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.165க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.