அட்சய திருதி: அதிரடியாக குறைந்த தங்கம் விலை - கண்டிப்பாக வாங்கலாம்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்தது விற்பனையாகிறது.
தங்கம் விலை
தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.
கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் வரலாறு காணாத அளவு உயர்ந்து பவுன் ரூ. 44 ஆயிரத்தை தாண்டியது. அதன் பிறகு ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.
குறைவு
இந்நிலையில் இன்று அட்சய திருதியை முன்னிட்டு இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.60 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.5,605-க்கும், ஒரு சவரன் ரூ.44,840-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது.
கிராமுக்கு 90 பைசா குறைந்து ஒரு கிராம் ரூ.80.40-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.80,400-க்கும் விற்பனையாகிறது.