தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை

Today Gold Price Daily Gold Rates Gold
By Yashini Feb 06, 2026 05:26 AM GMT
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், நேற்று திடீரென குறைந்தது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.580 குறைந்து ரூ.14,320 ஆகவும், ஒரு சவரன் ரூ.4,640 குறைந்து ரூ.1,14,560 ஆகவும் விற்பனையானது.

இந்நிலையில், இன்றும் தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை குறைந்துள்ளது.

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை | Gold Price Details 06 02 2026

அதன்படி. இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.200 குறைந்து ரூ.14,120 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,600 குறைந்து ரூ.1,12,960 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் குறைந்து ஒரு கிராம் ரூ.20 குறைந்து ரூ.280 ஆகவும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் ஆகவும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்

05-02-2026- ஒரு பவுன் ரூ.1,14,560

04-02-2026- ஒரு பவுன் ரூ.1,19,200

03-02-2026- ஒரு பவுன் ரூ.1,14,160

02-02-2026- ஒரு பவுன் ரூ.1,11,600

01-02-2026- ஒரு பவுன் ரூ.1,19,200

தொடர்ந்து குறையும் தங்கம், வெள்ளி விலை | Gold Price Details 06 02 2026

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்

05-02-2026- ஒரு கிராம் ரூ.300

04-02-2026- ஒரு கிராம் ரூ.320

03-02-2026- ஒரு கிராம் ரூ.300

02-02-2026- ஒரு கிராம் ரூ.300

01-02-2026- ஒரு கிராம் ரூ. 320