அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை
சமீப காலமாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலை தற்போது சவரனுக்கு ரூ. 7,600 வரை குறைந்தது.
தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு இருந்தது.
ஆனால் தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ 7200 வரையில் குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இதில் 2026 - 27 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்து இருந்தார்.
பட்ஜெட்டின் தாக்கம் தங்கம் விலையில் மாற்றத்தை தரும் என்ற எதிர்பார்ப்பு மக்களுக்கு நல்ல செய்தியை கொடுத்தது.
அதன் படி நேற்று முன்தினம், கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 600-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை 7200 ஆல் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 950-ம், சவரனுக்கு ரூ. 7,600-ம் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 13,950-க்கும், ஒரு சவரன் ரூ. 1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ. 20-ம், கிலோவுக்கு ரூ. 20,000-ம் குறைந்து ஒரு கிராம் ரூ. 300-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 3,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.