சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை! - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

Chennai Today Gold Price
By Swetha Subash May 26, 2022 06:00 AM GMT
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உக்ரைன் - ரஷியா போர் மற்றும் கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததால் அதன் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம், இறக்கம் கண்டு வருகிறது.

சென்னையில் அதிரடியாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை! - இல்லத்தரசிகள் மகிழ்ச்சி | Gold Price Decreased In Chennai Today

இந்நிலையில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.38,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.4,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.12 குறைந்து ரூ.38,690 ஆக விற்பனையானது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ,4,838 ஆக விற்பனையானது.

இன்னும் ஒரு சில நாட்களுக்கு தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கும் என நகை வியாபாரிகள் கணித்துள்ளனர்.