ஏறுமுகத்தில் தங்கம் - கிராமுக்கு ரூ.16 அதிகரிப்பு!

Chennai Gold Price
By Thahir Jul 23, 2021 06:01 AM GMT
Report

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 அதிகரித்துள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் - கிராமுக்கு ரூ.16 அதிகரிப்பு! | Gold Price Chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த 2 வாரங்களுக்கு மேலாக ரூ.36 ஆயிரத்திலேய நீட்டித்து வருகிறது. தொழில்துறையில் நிலவும் தேக்கம் குறித்த அச்சத்தால் தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதுமின்றி தங்கம் விலை 36 ஆயிரத்திலேயே நீடிக்கிறது.

நேற்று முன்தினம் ரூ.36,240க்கு விற்பனையான தங்கம் விலை நேற்று ரூ.35,920 ஆக குறைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ரூ.4,506க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.128 அதிகரித்து ரூ.36,048க்கு விற்பனையாகிறது.

மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 70 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.30க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.72,300க்கும் விற்பனை செய்யப்படுகிறது.