தடுப்பூசிக்கு தங்க மூக்குத்தி ..குஜராத்தில் நூதன அறிவிப்பு

vaccine people gold gujarat
By Jon Apr 05, 2021 01:03 PM GMT
Report

குஜராத்தின் ராஜ்கோட் பகுதியில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் பெண்களுக்கு இலவச தங்க மூக்குத்தி உட்பட பல்வேறு பரிசுகளை, அப்பகுதியைச் சேர்ந்த அமைப்பு அறிவித்துஉள்ளது. கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் இந்தியாவில் வேகமெடுத்துள்ளது. இதில் தமிழகம் உள்பட இந்தியாவின் சில மாநிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் குஜராத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் மக்களை தடுப்பூசி செலுத்த ஈர்க்கவும் நூதன முறை ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த நூதன முறை என்னவென்றால் குஜராத்தின் ராஜ்கோட்டில் உள்ள தடுப்பூசி முகாம் ஒன்றில், தடுப்பூசி போட்டுக் கொள்வோருக்கு பரிசு பொருட்கள் வழங்கப்படும் என, அப்பகுதியைச் சேர்ந்த தங்க நகை செய்வோர் அமைப்பு அறிவித்துள்ளது.

அதன்படி, பெண்களுக்கு தங்க மூக்குத்தியும், ஆண்களுக்கு பல்வேறு பரிசுப் பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போட்டுக் கொள்ளும் ஆர்வத்தை மக்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காக, இந்த பரிசு பொருட்கள் வழங்குவதாக, அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.