தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து - 12 பேர் உயிரிழப்பு
வெனிசுலாவில் வெள்ளத்தால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடிந்து விழுந்த தங்க சுரங்கம்
கடந்த புதன்கிழமை அன்று வெனிசுலா நாட்டின் எல் கால்லோ பகுதியில் கனமழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதியில் கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது 100க்கும் மேற்பட்டோர் சட்டவிரோதமாக சுரங்கத்தை திறந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயம் வெள்ளம் தங்க சுரங்கத்தை சூழ்ந்துள்ளது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் பேசுகையில், 112 பேர் சுரங்க இடிபாடுகளில் இருந்து தப்பியதாகவும் இவர்கள் சட்டவிரோதமாக சுரங்கத்தை திறந்து தங்கத்தை தேடும் பணியில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.