உள்ளாடைக்குள் மறைத்து ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை கடத்திய 19 வயது பெண்!
இளம்பெண் கடத்தி வந்த ரூ. 1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
தங்க கடத்தல்
கேரளா, காசர்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 19 வயதான இளம் பெண் ஷகிலா. இவர் துபாயிலிருந்து கரிப்பூர் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். விமானத்தில் வந்து இறங்கிய அந்த இளம் பெண்ணை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சோதனை கருவி, அவரிடம் தங்கம் இருப்பதற்கான எச்சரிக்கை ஒலியை எழுப்பியது. ஆனால் அவர் தங்கம் தன்னிடம் இல்லை என்று மறுத்துள்ளார். இதனால் தீவிர சோதனையில், தனது உள்ளாடைக்குள் ஒரு கோடி மதிப்புடைய 1884 கிராம் தங்கத்தை தைத்து வைத்து எடுத்து வந்துள்ளார்.
பறிமுதல்
அதனைத் தொடர்ந்து கடத்தி வரப்பட்ட தங்கம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. பிடிபட்ட தங்கம் 1.9 கிலோ என்றும் இதன் மதிப்பு ரூ.1 கோடிக்கு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து காவல்துறையினர் இளம்பெண்ணையும், தங்கத்தையும் சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.