காமன்வெல்த் போட்டி; தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்கு தங்கம் பதக்கம் - குவியும் பாராட்டு

Commonwealth Games
By Nandhini Aug 10, 2022 08:09 AM GMT
Report

காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி தங்கம் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு

4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி, இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி ஆகஸ்டு 8ம் தேதி வரை நடைபெற்றது.

காமன்வெல்த் போட்டிகளில் சுமார் 72 நாடுகள் கலந்து கொண்டுள்ளன. இப்போட்டியில், தடகளம், பேட்மின்டன், ஹாக்கி, குத்துச்சண்டை, பளு தூக்குதல், கிரிக்கெட் உள்ளிட்ட 19 போட்டிகளும், 8 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றன.சுமார் 6,500 வீரர்கள் மற்றும் குழு நிர்வாகிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டனர்.

Gold for Bhavani Devi

பாவனி தேவிக்கு தங்கப் பதக்கம்

இந்நிலையில், காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.

காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில், சேபர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை வசிலேவாவை 15-10 என்ற புள்ளிக் கணக்கில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி வீழ்த்தி வெற்றி வாகை சூடினார்.

காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி சமூகவலைத்தளங்களில் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.