விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - மீண்டும் எகிறிய தங்கம்!

Silver Gold
By Vinoja Jun 18, 2026 06:21 AM GMT
Report

தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்படும் மாற்றங்களை பொதுமக்கள், குறிப்பாக நகை வாங்க திட்டமிடுபவர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்.

அந்த வகையில், இன்றைய (ஜூன் 18) தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - மீண்டும் எகிறிய தங்கம்! | Gold And Silverr Rate Details June 18 Today

ஜூன் மாதத்தின் முதல் நாளிலேயே தங்கம் விலை கணிசமாகக் குறைந்து நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பின் சில நாட்களாக விலையில் ஏற்றத் தாழ்வுகள் பதிவாகி வருகின்றன.

நேற்று (ஜூன் 17) 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,030 ஆகவும், ஒரு சவரன் ரூ.240 குறைந்து ரூ.1,12,240 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய விலை நிலவரம் 

இந்நிலையில், இன்று (ஜூன் 18) தங்கம் விலையில் மீண்டும் சிறிய அளவில் உயர்வு ஏற்பட்டுள்ளது. அதன்படி, 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,060 ஆகவும், சவரனுக்கு ரூ.240 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,12,480 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - மீண்டும் எகிறிய தங்கம்! | Gold And Silverr Rate Details June 18 Today

அதேபோன்று, 18 காரட் தங்கத்தின் விலையும் உயர்வைக் கண்டுள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.11,770 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.94,160 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

மறுபுறம், வெள்ளி விலையில் இன்று சரிவு பதிவாகியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.270 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,70,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் - மீண்டும் எகிறிய தங்கம்! | Gold And Silverr Rate Details June 18 Today

தங்கம் விலையில் இன்று சிறிய உயர்வு ஏற்பட்டிருந்தாலும், கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் விலை இன்னும் சற்று கட்டுப்பாட்டிலேயே இருப்பதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.