இப்படியே போனா எப்படி.. மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு

Tamil nadu Today Gold Price
By Sumathi Mar 24, 2023 06:57 AM GMT
Report

கடந்த ஒரு வாரமாக ஏற்ற இறக்கத்தை கண்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை

தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவிலும் தங்கம் விற்பனை சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தங்கம் எப்போதுமே ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாக நமது நாட்டில் இருக்கிறது.

இப்படியே போனா எப்படி.. மீண்டும் தங்கம் விலை அதிரடி உயர்வு | Gold And Silver Rate In Tamil Nadu

கடந்த ஆண்டு மந்தமாக இருந்த தங்கச் சந்தை தற்போது எழுச்சி கண்டுள்ளது. அதன் படி 2 நாட்களாக விலை சரிவை கண்டு வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.

உயர்வு

அதன்படி, ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.20 உயர்ந்து 5,560 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.160 வரை உயர்ந்து ரூ.44,480 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி கிராம் ஒன்றிற்கு 30 பைசா உயர்ந்து ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு ரூ.75,700 என விற்பனையாகிறது.